திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 22 அக்டோபர் 2021 (07:46 IST)

எடப்பாடி பழனிசாமிக்கு மிக நெருக்கமானவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

முன்னாள் தமிழக முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு மிக நெருக்கமான ஒருவரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் என இன்று அதிகாலை முதல் சோதனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மிக நெருக்கமானவர் இளங்கோவன் என்பவர். இவர் தமிழ்நாடு கூட்டுறவு வங்கி மாநில தலைவராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன்குமார் ஆகியோரின் வீடுகளில் திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகின்றனர்
 
ஏற்கனவே இவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது