புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 22 அக்டோபர் 2021 (08:47 IST)

வருமானத்திற்கு அதிகமாக 131% சொத்து சேர்ப்பு: இளங்கோவன் மீது FIR

சேலம் மத்திய கூட்டுறவு வங்கி சங்க தலைவர் இளங்கோவனின் வீடு மற்றும் 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

 
முன்னாள் தமிழக முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு மிக நெருக்கமானவருமான இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் என இன்று அதிகாலை முதல் சோதனை செய்து வருகின்றனர். 
 
2014 ஆம் ஆண்டு  ரூ.30 லட்சமாக இருந்த இளங்கோவன் சொத்து மதிப்பு 2020 ஆம் ஆண்டு ரூ. 5.6 கோடியாக உள்ளது. அதாவது 3.78 கோடி ரூபாய் அளவிற்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். வருமானத்திற்கு அதிகமாக 131 சதவீதம் சொத்து சேர்த்துள்ளதாக தெரிகிறது.