புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 17 ஜனவரி 2022 (19:05 IST)

தமிழக ஊர்திகள் நிராகரிப்பு: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்திகள் நிராகரிக்கப்பட்டது குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார் அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது”
 
குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்திகள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக மாநில அதிகாரிகள் மூன்று முறை மத்திய அரசு அதிகாரிகளிடம் ஆஜராகி விளக்கம் அளித்தனர் என்றும் திருத்தங்கள் செய்து சமர்பிக்கப்பட்ட 7 மாதிரிகளையும் மத்திய அரசின் குழுவினர் நிராகரிப்பது ஏற்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 
 
நான்காவது சுற்று கூட்டத்திற்கு தமிழக அதிகாரிகளை அழைக்காமலே குடியரசு தின அணிவகுப்பில் இருந்தது தமிழகத்தின் ஊர்திகள் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பாக வஉசி, பாரதி, வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் ஆகியோர்களின் அலங்கார ஊர்தி மறுக்கப்பட்டது ஏமாற்றத்தை தந்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 
பிரதமர் மோடி உடனடியாக தலையிட்டு விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.