1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 17 ஜனவரி 2022 (13:10 IST)

தமிழக ஊர்தி வாகனங்கள் நிராகரிப்பு: முதல்வர் கடிதம் எழுதவுள்ளதாக தகவல்!

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து தமிழக முதல்வர் அவசர ஆலோசனை செய்ய இருப்பதாகவும் ஆலோசனைக்கு பின்னர் மத்திய அரசுக்கு கடிதம் எழுத இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
குடியரசு தின அணிவகுப்பில் கப்பலோட்டிய தமிழன் வ உ சி, வேலுநாச்சியார், பாரதியார் உருவங்கள் அடங்கிய அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டதாகவும், தேசிய அளவில் பிரபலம் இல்லாத சுதந்திர போராட்ட வீரர்கள் படங்கள் உள்ள அணிவகுப்பு ஊர்திகள் அனுமதிப்பதில்லை அனுமதிக்கவில்லை என மத்திய அரசு கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது 
 
இதனை அடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய இருப்பதாகவும் ஆலோசனைக்கு பின்னர் மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுத இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது