1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. CM Stalin visit sembarapakkam lake today

இன்று செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதல்வர்
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் நிர்வாகிகளை வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை கொடுத்து எடுக்க அறிவுறுத்தி இருந்தார் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக இன்று செம்பரம்பாக்கம் ஏரியை முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆய்வு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
இதனை அடுத்து செம்பரம்பாக்கம் பகுதியில் காவல்துறையினர் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. என்று செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வு செய்த பின்னர் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
பெட்ரோல் விலை இன்றும் உயர்வு: ரூ.100ஐ நெருங்கியது டீசல்!