1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu districts to have rain today

இன்று எங்கெங்கு மழைக்கு வாய்ப்பு?

தமிழகம்
இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில் தமிழகத்தில் மேலும் சில நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது. 

 
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பெய்து வந்த நிலையில், தற்போது வங்க கடல் மற்றும் அரபிக்கடலில் இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் மேலும் சில நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோயமுத்தூர், ஈரோடு, திருப்பூர் ,சேலம், தர்மபுரி ,வேலூர், ராணிப்பேட்டை ,விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. 
 
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
அடுத்த கட்டுரையில்
கேரள மழை வெள்ளத்தில் பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு: 9 பேரை காணவில்லை