வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 1 நவம்பர் 2023 (11:54 IST)

பாஜக ஆட்சியில் ஜனநாயகம் கேள்விக்குறியாகிவிட்டது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Stalin
பாஜக ஆட்சியில் ஜனநாயகம் கேள்விக்குறியாகிவிட்டது என்றும், வரும்  நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் இந்தியா கூட்டணிக்கு சிறப்பான வெற்றியை வழங்க வேண்டும் என்றும்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆ.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டபோது பேசினார். அவர் மேலும் கூறியதாவது:
 
தனக்கு எதிராக யார் எந்த கருத்தை சொன்னாலும் அவர்களை பாஜக அரசு மிரட்டுகிறது எனவும், தேர்தல் நெருங்குவதால் பாஜகவிற்கு  தோல்வி பயம் வந்துவிட்டது எனவும், ஜனநாயகம் பாதுகாக்கப்படுமா? மக்களாட்சி நீடிக்குமா? என்ற நிலையில் தான் சூழல் உள்ளது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
 
மேலும் IT, ED ரெய்டைத் தொடர்ந்து தொலைபேசியை ஹேக் செய்யும் முயற்சியையும் பாஜக கையாண்டுள்ளது எனவும், இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனமே எச்சரிக்கை கடிதத்தை எதிர்கட்சியினருக்கு வழங்கி உள்ளது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva