1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : புதன், 1 நவம்பர் 2023 (10:47 IST)

தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி.. 2 நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக தகவல்..!

PM Modi
பிரதமர் மோடி வரும் டிசம்பர் மாதம் தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருப்பதை அடுத்து பல மாநிலங்களில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் அடுத்த கட்டமாக வரும் டிசம்பர் முதல் வாரத்தில் பிரதமர் மோடி தமிழக மரம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குலசேகரப்பட்டணம் ராக்கெட் ஏவுதளத்திற்கு அவர் அடிக்கல் நாட்டுவார் என்றும் இது குறித்த விழாவில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
 
மேலும் பாம்பன் பாலத்தில் ஒரு பகுதியை திறந்து வைக்கும் நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. பிரதமர் மோடி தமிழகம் வர இருக்கும் தகவல் இன்னும் ஒரு சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அதன் பின்னர் அவரை வரவேற்க தமிழக பாஜகவினர் சிறப்பு ஏற்பாடு செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran