வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 9 ஜூலை 2023 (10:44 IST)

ஆட்சிக்கு ஆபத்து என்றாலும் கவலை இல்லை: முதல்வர் ஸ்டாலின்

MK Stalin
ஆட்சிக்கு ஆபத்து என்றாலும் கவலைப்பட மாட்டோம் என்றும் பாஜகவை எதிர்ப்பதில் உறுதியாக இருப்போம் என்றும் கொள்கையில் உறுதியாக இருப்போம் என்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
இன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் பிரதமர் என்ற நிலையை மறந்து மோடி ஏதேதோ உளறிக் கொண்டிருக்கிறார் என்றும் சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காகவே எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடத்திய தீர்மானம் இயற்றப்பட்டது என்றும் தெரிவித்தார். 
 
2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கொள்ள தயாராக இருக்கும் என்றும் நமது ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் கொள்கையில் உறுதியாக இருப்போம் என்றும் அவர் தெரிவித்தார். 
 
மேலும் மகளிர் உரிமை திட்டத்தால் சுமார் ஒரு கோடி மகளிர் பயன்தார உள்ளனர் என்றும் இது சிலருக்கு வயிற்று எரிச்சலை ஏற்படுத்தி உள்ளதால் அவர்கள் வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் முதல்வர் சாலை தெரிவித்தார்.
 
 
Edited by Siva