செவ்வாய், 26 செப்டம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 15 செப்டம்பர் 2022 (22:01 IST)

மாநில ஆளுநர்களைக் கொண்டு இரட்டை ஆட்சி நடத்தப் பார்க்கிறார்கள் - முதல்வர் ஸ்டாலின் பேச்சு

Mk Stalin
திமுக முப்பெரும் விழாவில் இன்று பேசிய முதல்வர் ஸ்டாலின்  நாற்பதும் நமது நாடும் நமதே என்று தெரிவித்துள்ளார்.

திமுக முப்பெரும் விழா இன்று நடந்தது. இதில்,  திமுக முன்னோடித் தலைவர் விருதுகள் வழங்கப்பட்டது, திராவிட மாடல் நூலும் வெளியிடப்பட்டது.

இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஒன்றிய அரசின் பல்வேறு சட்டங்கள் மக்களுக்கு விரோதமாக உள்ளது,. தமிழகத்தின் உரிமைகளும் பறிக்கப்பட்டு வருகிறது.

ஒன்றிய அரசு மாநில ஆளு நர்களைக் கொண்டு இரட்டை ஆட்சி நடத்திப்பார்க்கிறார்கள்.  இதைத் தடுக பாராளுமன்றத்தில் நமக்கு 40 பாராளுமன்ற   உறுப்பினர்கள் இருந்தாக வேண்டும்,  வரும் பாராளுமன்றத் தேர்தலுக்காக  நீங்கள் இப்போதே பணியாற்ற வேண்டும் எப்று நான் விருது நகரில் முழங்குகிறேன்… நாற்பதும்  நமதே நாடும் நமதே என்று தெரிவித்துள்ளார்.