ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 9 டிசம்பர் 2023 (13:23 IST)

படுத்தே விட்டானய்யா.. கமல்ஹாசனை வச்சு செஞ்ச கஸ்தூரி..!

மக்களுக்கு பணி செய்வது தான் தற்போது என் முதல் பணி என்றும் அரசை குறை கூறுவது அல்ல என்றும் கூறிய கமல்ஹாசனை நடிகை கஸ்தூரி தனது சமூக வலைதளத்தில் வச்சு செய்துள்ளார். 
 
சென்னை வெள்ளம் குறித்து கருத்து தெரிவித்த  நடிகர் கமல்ஹாசன் கூறிய போது  ’மக்களுக்கு என்ன செய்வது என்பது தான் தற்போதைய பணி என்றும் அரசை குறை கூறுவது அல்ல என்றும் தெரிவித்தார். 
 
அரசு இயந்திரம் ஒரு கோடி பேருக்கு சென்று சேர்வது சாத்தியமில்லை என்றும் எதிர்காலத்தில் மழை பாதிப்பு இல்லாதபடி வல்லுனர்களுடன் இணைந்து திட்டங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். 
 
மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் மருத்துவ முகாம் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.  கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு நடிகை கஸ்தூரி தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
 
That படுத்தே விட்டானய்யா moment. 
 
 மக்களுக்கு தம் அவதியை வெளியிட உரிமையில்லையா? யாரும் வேண்டுமென்றே குறை சொல்ல விரும்பவில்லை. நன்றி சொல்லவே விரும்புவார்கள்.
அரசின்  விளம்பர பிரசாரம் அளவிற்கு செயல்பாடு இருந்தால் நன்றி சொல்லவும் சென்னை தயங்காது.
 
Edited by Mahendran