ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரண தொகை கிடைக்குமா?
மிக்ஜம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு என 4 மாவட்டங்களில் பெய்த தொடர் மழை காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டது. பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் சில நிவாரண அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவாரணம் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ரேஷன் அட்டை இல்லாதவர்களும் சென்னையில் வசிக்கும் நிலையில் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கும் நிவாரண தொகை வழங்க தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
Edited by Siva