தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது என சட்டம் ஒழுங்கு தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லை என்றும், சட்டம் ஒழுங்கிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தால் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது என்றும் பேசிய முதல்வர், நிம்மதியாக உள்ள நாட்டில் தான் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.
மேலும் கடந்த 6 மாத குற்ற வழக்குகள் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது என்றும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை தொடக்கத்திலேயே கண்டறிந்து களைய வேண்டும் என்றும் அவர் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது என்பதால் சட்டம் ஒழுங்கை சிறப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும், நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால், காவல்துறை அதிகாரிகள் மிக மிக எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
Edited by Mahendran