1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Annamalai ask appointment to see cm stalin

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்ட அண்ணாமலை: நேரம் கொடுப்பாரா?

முக ஸ்டாலின்
முக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை சந்திக்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரம் கேட்டதாக கூறப்படும் நிலையில் அண்ணாமலைக்கு முதல்வர் நேரம் கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அதுமட்டுமின்றி முதலமைச்சர் மீது நேரடியாக ஊழல் குற்றச்சாட்டு கூறினார் என்பதும் முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் அமைச்சர்கள் மீது சொத்து பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் என்பதும் தெரிந்தது. 
 
இந்த நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்திக்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரம் கேட்டுள்ளார். கரு நாகராஜன் தலைமையிலான குழு இம்மாதத்தில் முதல்வரை சந்திக்க அனுமதி கோரி அண்ணாமலை கடிதம் எழுதியதாகவும் இந்த சந்திப்பின்போது மது இல்லாத தமிழகத்தை உருவாக்கும் திட்ட அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பிக்க அண்ணாமலை திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
அண்ணாமலை மற்றும் பாஜக குழுவினர்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரம் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் மூன்று புள்ளி
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
பப்ஜி காதல்: காதலனை நம்பி பாகிஸ்தான் பெண் சவால்களை கடந்து இந்தியா வந்தது எப்படி?