1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 14 பிப்ரவரி 2022 (18:50 IST)

நான் மிசாவையே பார்த்தவன், என்னை ஈபிஎஸ் மிரட்ட முடியாது: ஸ்டாலின்

நான் மிசாவையே பார்த்தவன் என்றும் என்ன எடப்பாடி பழனிசாமி யார் மிரட்ட முடியாது என்றும்  முதலமைச்சர் முக ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
என்னை மிரட்டி விட முடியும் என கற்பனையில் கூட அப்படி ஒரு கனவு காண முடியாது என்று கூறிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் திமுக ஆட்சி இன்னும் இருபத்தி ஏழு அமாவாசைக்கு தான் இருக்கும் என்று அதிமுகவினர் புது ஜோசியம் கூறினார்கள் என்றும் ஆனால் அரசியல் அமாவாசைகள் யார் என்று தெரிந்து தான் அமைதிபடை மாறி வாக்களித்து அதிமுகவினரை மக்கள் இப்போது புலம்ப வைத்துள்ளனர் என்றும் அதிமுக அஸ்தமனத்தில் உள்ளது என்றும் கூறினார்
 
 மேலும் ஜல்லிக்கட்டு போராட்டத்தை தீவிரவாத போராட்டம்,ம் தேசவிரோத போராட்டம் சமூக விரோத போராட்டம் என ஓபிஎஸ் கூறினார் என்றும் இதனை இல்லை என்று அவரால் மறுக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார்
 
 எடப்பாடிபழனிசாமி யாரை மிரட்டி பார்க்கிறார் நான் மிசாவையே பார்த்தவன் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது