செவ்வாய், 25 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 22 டிசம்பர் 2023 (20:53 IST)

கிறிஸ்துமஸ் விழாவை அறநிலையத்துறை அமைச்சர் நடத்துவது தான் திராவிட மாடல்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

கிறிஸ்துமஸ் விழாவை இந்து அறநிலையத்துறை அமைச்சர் நடத்துவது தான் திராவிட மாடல் அரசு என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
சென்னை பெரம்பூரில் டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அதில் அனைத்து மதமும் அன்பையே போதிகின்றன, எந்த மதமும் வேறுபாட்டை வெளிப்படுத்துவதில்லை
 
நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் ஆனால் ஒரு சிலர் இதை அரசியல் காரணத்திற்காக குலைக்க பார்க்கிறார்கள். மதவாத சக்திகளால் எத்தனை காலம் ஆனாலும் இங்கு வேரூன்ற முடியாது’ என்று தெரிவித்தார்,
 
இதனையடுத்து சென்னை பெரம்பூரில் திராவிட முன்னேற்ற கழக சிறுபான்மை நல உரிமை பிரிவின் சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் பெருவிழாவில், கேக் வெட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டாடினார். 
 
Edited by Mahendran