வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வியாழன், 7 ஜூலை 2022 (22:35 IST)

தமிழகத்தில் 20 அரசுக்கல்லூரிகள்: முதல்வர் திறந்து வைத்தார்!

Stalin
தமிழகத்தில் 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். 
 
இன்று காணொளி வாயிலாக அவர் 20 புதிய அரசு கலைக் கல்லூரிகள் திறந்து வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது 
 
கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் ரூ.152.01 கோடியில் கட்டப்பட்ட வகுப்பறை கட்டடங்கள் மற்றும் விடுதிகளையும் முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார் 
 
தமிழகத்தில் 20 புதிய கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் வரும் கல்வி ஆண்டில் அதிக மாணவர்கள் கல்லூரியில் சேர்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது