1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 1 அக்டோபர் 2021 (19:05 IST)

தமிழக வரலாற்றில் முதன்முறை: விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கும் முதல்வர்

தமிழக வரலாற்றில் முதன்முறையாக கூட்டுறவு சங்கத்தில் முதலமைச்சர் ஒருவர் நேரடியாக விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கும் நிகழ்ச்சி நாளை நடைபெறவுள்ளது.
 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாரம் குறவகுடி ஊராட்சி கே.நாட்டார்பட்டி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் முதலமைச்சர் நேரில் சென்று விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குகிறார் என தகவல் வெளிவந்துள்ளது.
 
நாளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு உசிலம்பட்டியில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர் அதற்கு பின் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பயிர்க்கடன் வழங்குகிறார். தமிழக வரலாற்றில் முதன்முறையாக விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கும் விழாவில் முதல்வர் கலந்து கொண்டு அவரே தனது கைப்பட கடன்களை வழங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது