வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை
வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 20க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களை ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த வழக்கு குறித்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.
இதனை அடுத்து வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்துள்ளார். இந்த இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்துவது குறித்து ஆலோசனையும் நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் பாமக இணையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்து முதலமைச்சர் ஆலோசனை செய்து வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva