வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 6 மே 2024 (11:37 IST)

மனம் தளர வேண்டாம்.. குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்..!

Stalin
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து கூறிய தமிழக முதல்வர் முக ஸ்டாலின், குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
 
பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! உயர்கல்வியில் சிறந்து விளங்கி, தலைசிறந்த பொறுப்புகளில் நீங்கள் மிளிர வேண்டும் என்று கூறிய தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இம்முறை குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்து காத்திருக்கும் வாய்ப்புகள் உங்கள் முன்னேற்றத்துக்கான துணையாக அமையும் என்ற நம்பிக்கையுடன் முன்னே செல்லுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
 
அதேபோல் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது: பிளஸ் 2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். 
 
மதிப்பெண்கள் குறைவாக பெற்று உடனடித் தேர்வுகள் எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் மகிழ்ச்சியோடும், நம்பிக்கையோடும் தேர்வுகளை எதிர்கொள்ளவும்  வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
 
வெற்றி பெற்ற மாணவர்கள் என்றில்லாமல் தேர்வு எழுதிய அனைத்து மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின்  அவர்களின் தலைமையிலான அரசு துணை நிற்கும்.
 
Edited by Mahendran