10 சதவீத இட ஒதுக்கீட்டை தனியார் துறையிலும் அமல்படுத்த வேண்டும்: உமா பாரதி
இன்று சுப்ரீம் கோர்ட்டில் வெளியான இட ஒதுக்கீடு குறித்த தீர்ப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என அளிக்கப்பட்டது
இந்த தீர்ப்புக்கு தமிழகத்தில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் இந்த தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் உமாபாரதி இந்த தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். அரசு வேலைகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு தீர்ப்பை வரவேற்பதாகவும் தனியார் துறையிலும் இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்
எல்லா ஏழைகளும் ஒரே ஜாதிதான் என்றும் அது ஏழை என்ற ஜாதி என்றும் இந்த இட ஒதுக்கீடு நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
Edited by Mahendran