வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 3 ஜனவரி 2022 (21:01 IST)

உயிரிழந்த புதுக்கோட்டை சிறுவன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் உயிரிழந்த புதுக்கோட்டை சிறுவன் குடும்பத்தினருக்கு ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி அறிவித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுக்கோட்டை அருகே நார்த்தமலை என்ற பகுதியில் வீரர்கள் துப்பாக்கியை சுடும் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர் 
 
அப்போது திடீரென அந்த பக்கம் அந்த சிறுவனின் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது இதனை அடுத்து அந்த சிறுவன் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன் அந்த சிறுவன் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார் புதுக்கோட்டை சிறுவனின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் இழப்பீடு தர உத்தரவிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்