செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 11 ஜூலை 2023 (16:28 IST)

முதல்வரும் உதயநிதியும் மன்னிப்பு கேட்க வேண்டும்: வானதி சீனிவாசன் ஆவேசம்..!

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சமீபத்தில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட போது பிரதமர் மோடி இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் கொடுப்பதாக கூறினார். ஆனால் 15 ரூபாய் கூட கொடுக்கவில்லை என்று தெரிவித்தார். 
 
அதேபோல் அமைச்சர் உதயநிதியும் செய்தியாளர்களிடம் பேசிய போது மோடி 15 லட்சம் ரூபாய் கொடுப்பதாக மோடிகூறினார், ஆனால் தரவில்லை என்று தெரிவித்தார். 
 
இதற்கு பதிலளித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ரூபாய் 15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் மோடி பேசியதற்கான ஆதாரத்தை முதல்வர் வெளியிட வேண்டும். ஆதாரத்தை வெளியிட விட்டால் முதல்வரும் அமைச்சர் உதயநிதியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆவேசமாக கூறினார். 
 
ரூபாய் 15 லட்சம் வழங்குவதாக பிரதமர் மோடி வாக்குறுதி தந்ததாக ஊழலில் திளைத்த கட்சிகள் பொய் பரப்புகின்றன என்றும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran