புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (14:56 IST)

சென்னை மருத்துவருக்கு கொரோனா தொற்று !

தமிழகத்தில் இதுவரை 1267 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 பேர் பலியாகியுள்ளனர். 

சென்னையில் அரசு  மருத்துவமனையில்  கொரொனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 30 பேர் இன்று குணமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவர்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை இதய நோய் சிகிச்சை பிரிவு மருத்துவருக்கு ( 34 வயது )கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.  அதில், மருத்துவருக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டதால், உடனடியாக இதய நோய் சிகிச்சை பிரிவு கட்டடம்மூடப்பட்டது.

இதனால்,  மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.