1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chrompet students with omicon symtoms

ஐ.எம்.டி-யில் தொற்றுக்குள்ளானவர்களில் 90% பேருக்கு ஒமைக்ரான் அறிகுறிகள்!

Chrompet
சென்னை குரோம்பேட்டை ஐ.எம்.டி கல்வி நிறுவனத்தில் தொற்றுக்குள்ளானவர்களில் 90% பேருக்கு ஒமைக்ரான் அறிகுறிகள் தென்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்துள்ள நிலையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. ஆயிரத்திற்கும் அதிகமான தெருக்களில் கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் பொதுமக்கள் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்வி நிறுவனத்தில் உள்ள மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1417 மாணவர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டதில் 80 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதில் 50 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறிகள் தென்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனிடையே சென்னை குரோம்பேட்டை ஐ.எம்.டி கல்வி நிறுவனத்தில் 60 மாணவர்களுக்கு தொற்று உறுதியாகி இருந்தது. அதற்குமுன்பே 81 மாணவர்களுக்கு தொற்று உறுதியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களில் 90% பேருக்கு ஒமைக்ரான் அறிகுறிகள் தென்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
இந்தியாவில் 150 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை - மோடி பெருமிதம்!