செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 27 ஜனவரி 2020 (10:13 IST)

சிறார் ஆபாசப்பட விவகாரம்: திருச்சியில் மேலும் இருவர் கைது

உலகிலேயே இந்தியாவில்தான் சிறுவர்கள் ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும் இது குறித்த பட்டியல் தயாராகி இருப்பதாகவும் அந்தப் பட்டியலின்படி மாவட்ட வாரியாக பிரித்து விரைவில் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறுவர்கள் ஆபாச பட தடுப்பு பிரிவு காவல்துறையினர் ஏற்கனவே எச்சரித்துள்ளனர் என்பது தெரிந்ததே 
 
இதனடிப்படையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருச்சியை சேர்ந்த அல்போன்சா என்பவர் சிறுமிகள் ஆபாச படத்தை இணையதளத்தில் பதிவேற்றியதாக கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அவரது பேஸ்புக் மெசஞ்சரில் இருந்தவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களில் ஆபாச படங்களை பகிர்ந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது 
 
இந்த நிலையில் திருச்சியில் இது தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி கண்டோன்மென்ட் என்ற பகுதியில் சிறார் ஆபாச படங்களை மற்றவர்களுக்கு விநியோகம் செய்து வியாபாரம் செய்ததாக காதர்பாட்சா, ஷேக் அப்துல்லா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் இந்த கைது நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் இருந்து சில திடுக்கிடும் தகவல்கள் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது