ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 25 மார்ச் 2024 (16:19 IST)

மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..! எதற்காக தெரியுமா..?

cm stalin
பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 26 தொடங்கி ஏப்ரல் 8 ஆம் வரை தேதி வரை நடைபெறுகிறது. மே 10-ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.
 
இந்நிலையில் பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது பதிவிட்டுள்ள முதல்வர், பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே... All the best என குறிப்பிட்டுள்ளார்.
 
நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது என்றும் அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

 
இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதிசெய்யுங்கள் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.