வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 25 மார்ச் 2024 (07:36 IST)

நீட் தேர்வு.. தமிழகத்தில் மட்டும் 1.55 மாணவர்கள் விண்ணப்பம்..!

2024 ஆம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு தமிழகத்தில் இருந்து மட்டும் சுமார் 1.55 லட்சம் பேர் விண்ணிப்பித்துள்ளதாகவும், நாடு முழுவதும் 23 லட்சத்து 81,833 பேர் விண்ணப்பித்து உள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது


2024ஆம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு பிப்ரவரி மாதம் 9-ம் தேதி தொடங்கி, மார்ச் 16 ஆம் தேதியுடன் நிறைவு பெற்ற நிலையில், இந்த தேர்வுக்கு நாடு முழுவதும் 23 லட்சத்து 81,833 பேர் விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.  

இதில் தமிழகத்தில் இருந்து மட்டும்  1.55 லட்சம் பேர் விண்ணிப்பித்துள்ளதாகவும், அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 3,39,125 பேர் விண்ணப்பித்து உள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

2022-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 18.72 லட்சம் பேரும்,  கடந்த ஆண்டில் 20.87 லட்சம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் இந்த ஆண்டு அதிகமானோர் விண்ணப்பித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva