வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 25 மார்ச் 2024 (16:01 IST)

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்..! காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு..!!

Congress Canditate
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக தாரகை கத்பட் அறிவிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலோடு சில மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலும், காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது.
 
அந்த வகையில், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் மக்களவைத் தேர்தலோடு சேர்த்து இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பாஜக வேட்பாளராக வி.எஸ்.நந்தினி என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக தாரகை கத்பட் அறிவிக்கப்பட்டுள்ளார்.