1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 12 ஜூன் 2024 (13:20 IST)

சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..! இரு மாநில ஒத்துழைப்பு குறித்து பதிவு..!!

MK Stalin
நான்காவது முறையாக ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
பிரதமர் மோடி முன்னிலையில் ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபுநாயுடு இன்று பதவி ஏற்று கொண்டார். அவருக்கு ஆளுநர் அப்துல்நசீர் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பும்  செய்து வைத்தார். சந்திரபாபு நாயுடுவுடன் 24 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டனர்.
 
இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நான்காவது முறையாக ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள மாண்புமிகு சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.  
 
உங்கள் தலைமை மாநிலத்திற்கு செழிப்பையும் நலனையும் கொண்டு வரட்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இரு மாநிலங்களின் முன்னேற்றத்திற்காக ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு இடையேயான பிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த எதிர்பார்க்கிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.