திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (10:04 IST)

சென்னையில் 31 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்த முதல்வர் முக ஸ்டாலின்

இந்து சமய அற நிலையத்துறை சார்பில் தமிழ் நாடு முழுவதும் சுமார் 216 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக வெற்றி பெற்று, முதல்வர் முக. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை அமைந்துள்ளது.

ஆட்சிப் பொறுப்பை ஏற்றது முதல் மக்களுக்கு பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது திமுக அரசு.

இந்த நிலையில், இன்றூ சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் 31 ஜோடிகளுக்கு முதல்வர் முக ஸ்டாலின்  திருமணம் நடத்தி வைத்தார்.

தமிழக இந்து சமய அற நிலையத்துறை சார்பில் தமிழ் நாடு முழுவதும் சுமார் 216 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதில், 31 ஜோடிகளுக்கு ரூ.72,000 மதிப்பில் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj