திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 24 ஜூன் 2021 (19:39 IST)

கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சற்று முன் மரியாதை செலுத்தி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
கடந்த 10 ஆண்டுகளுக்கு பின்னர் திமுக மீண்டும் தமிழகத்தில் ஆட்சியை பிடித்துள்ளது என்பது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும் திமுக தலைவருமான முக ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் முக ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பின் முதல் முறையாக சட்டமன்ற கூட்டத்தொடர் சமீபத்தில் தொடங்கி இன்றுடன் முடிவடைந்தது முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்த நிலையில் தனது தந்தைக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது நினைவிடத்தில் சென்று முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்திய தகவல்கள் வெளிவந்துள்ளன மேலும் தமிழக அமைச்சர்களும் முதல்வருடன் சென்று. கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது