1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 24 ஜூன் 2021 (18:18 IST)

22 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முதல்வர் ஸ்டாலின் உறுதி

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வரும் நிலையில் சி.ஏ.ஏ உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளுக்கு நடுவே தமிழக சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் இன்றைய கூட்டத்தொடரில் கொரோனா பாதிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்றை சட்டசபை கூட்டத்தில் அறிவிப்புகள் சிலவற்றை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் எட்டுவழி சாலை, மீத்தேன், சிஏஏ உள்ளிட்டவற்றிற்கு எதிராக போராடியவர்கள் மீது தமிழக அரசு தொடுத்த வழக்குகளை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். முன்னதாக ஆட்சிக்கு வந்து சில நாட்களில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டது .

மேலும்,  மீத்தேன் நியூட்ரினோ  போன்ற திட்டங்களுக்கு எதிராகப் போராடியவர்கள் மீது போடப்பட்ட அனைத்து  வழக்குகள் வாபஸ் பெறப்பட்டது.  அதேபோல் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் வகைஉஇல் பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக போரட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் எனவும், சமத்துவ புரவங்க சீரமைப்பட்டு புதிய சமத்துவ புரங்கள்  அமைக்கப்படும் எனவும், திருக்கோயிகளைப் புனரமைக்க வேண்டி ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், திண்டிவனம் உள்ளிட்ட வட மாவட்டங்களில்  இரண்டு தொழிற்சாலைகள் நிறுவி அதில் 22000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.