திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 6 டிசம்பர் 2022 (23:30 IST)

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்!

borewell
மத்திய பிரதேச மாநிலம் பீட்டல் மாவட்டம் மாண்டவி என்ற கிராமத்தில் 5 வயது சிறுவன் ஆழ்துளை தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மா நிலம் பீட்டர் மாவட்டம் மாண்டவி என்ற கிராமத்தில் தன் வீட்டில் அருகில்  5 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்பகுதியில் சரியாக மூடப்படாமல் இருந்த ஒரு ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார்.  இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தோர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சிறுவனை மீட்க முயற்சித்தனர். ஆனால், சிறுவன் 55 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டார்.

எனவே, பேரிடர் மீட்புப் படையினர் அங்கு விரைந்து வந்து  சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.