1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chief Minister Kamal Naths neck pull outside Sikh organization

முதல்வர் கமல்நாத்தின் கழுத்தை பிடித்து தள்ளுவோம் - சீக்கிய அமைப்பு

madya prashanth
டில்லியில், மத்திய பிரதேச மாநில முதல்வர் தேர்தல் பிரசாரத்துக்கு வந்தால் அவரது  கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவோம் என அகாலி தள தலைவரான மஜ்ஜிந்தர் சிங் சிர்சா தெரிவித்துள்ளது டில்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டில்லியில் வரும் சட்டசபை தேர்தலையொட்டி நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது. இதில், மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தின் பெயரும் இடம்பெற்றிருந்தது.
 
இந்தப் பட்டியல் வெளியானதும் ,  இதுகுறித்து கருத்து கூறிய டில்லி சீக்கிய குருத்வாரா நிர்வாக கமிட்டி தலைவரும் அகாலிதள தலைவருமான மஜ்ஜிந்தர் சிங் சிர்சா, மத்திய பிரதேச முதல்வர் டில்லியில் பிரசாரம் செய்தால் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவோம் என தெரிவித்துள்ளார்
அடுத்த கட்டுரையில்
கேரளா நர்ஸுகளுக்கு கொரோனா உள்ளதா?? பினராயி விஜயன் கேள்வி