செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 7 ஜூன் 2022 (13:10 IST)

சிதம்பரம் கோவிலில் அறநிலையத்துறை ஆய்வு: கணக்கை தர தீட்சதர்கள் மறுப்பா?

chidambaram
சிதம்பரம் நடராஜர் கோவிலில் அறநிலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வந்தபோது தீட்சதர்கள் கணக்கு காண்பிக்க முடியாது என்று கூறியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சிதம்பரம் நடராஜர் கோயிலில் அறநிலை துறை அதிகாரிகள் இன்று ஆய்வு செய்ய சென்றனர். அப்போது கோவில் கணக்கு விவரங்களை தீட்சிதர்கள் தர மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது
 
சிதம்பரம் கோவில் நிர்வாகம் மீது பல்வேறு புகார்கள் வந்ததை அடுத்து அறநிலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வந்ததாக கூறிய நிலையிலும் கணக்கு தர முடியாது என தீட்சிதர்கள்  மறுப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இதனை அடுத்து அறநிலை துறை அதிகாரிகள் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன எடுக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்