செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : திங்கள், 30 மே 2022 (20:35 IST)

கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

Karthi
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் அவர்களின் மகனும் மக்களவை எம்பியுமான கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு மீதான தீர்ப்பை டெல்லி நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது 
 
263 சீனர்களுக்கு முறைகேடான முறையில் விசா வழங்கிய விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதாக இருந்தால் முன்கூட்டியே தகவல் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருந்தது.
 
இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் மனு தாக்கல் செய்த நிலையில் இந்த முன் ஜாமீன் மனு மீது விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு அளிக்க இருப்பதாக கூறப்பட்டது
 
 ஆனால் டெல்லி சிபிஐ நீதிமன்றம் வரும் ஜூன் மூன்றாம் தேதி இந்த மனுவின் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது