சரவணன் வெளியேற்றம் குறித்த அறிவிப்பு: கதறி அழும் ஹவுஸ்மேட்ஸ்

Last Modified செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (09:25 IST)
பிக் பாஸ் வீட்டில் இருந்து நேற்று சரவணன் திடீரென வெளியேற்றப்பட்ட நிலையில் அவர் வெளியேற்றப்பட்டது தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் குழப்பத்தில் இருந்தனர்
கன்ஃபக்ஷன் சென்றவரை காணவில்லை என்று ஹவுஸ்மேட்ஸ்கள் தேடிக் கொண்டிருக்கும் நிலையில் சற்று முன் வெளியான புரோமோ வீடியோவில் இதுகுறித்த அறிவிப்பை பிக்பாஸ் அறிவித்துள்ளார். ஒரு சில காரணங்களுக்காக சரவணன் இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் என்று பிக்பாஸ் கூறியதை கேட்டதும் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்

குறிப்பாக கவின், சாண்டி, மதுமிதா ஆகியோர் தொடங்கிவிட்டனர். சேரன் மனவருத்தத்தில் தலையை குனிந்தபடி காணப்படுகிறார். என்ன ஆச்சு என்று அனைவரும் கேட்க, சரவணன் வெளியேற்றப்பட்டதற்கான காரணத்தை கூறுங்கள் பிக்பாஸ் என்று ஒரு சில ஹவுஸ்மேட்ஸ்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருப்பினும் சரவணன் வெளியேற்றத்திற்கான காரணத்தை பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களிடம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
ஹவுஸ்மேட்ஸ்கள் அனைவரிடத்திலும் ஆறுதல் கூறும் வகையிலும் நம்பிக்கை ஊட்டும் வகையிலும் இருந்த சரவணன் வெளியேறியது மற்ற போட்டியாளர்களுக்கு பெரும் இழப்பாக கருதப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :