1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 1 டிசம்பர் 2023 (15:46 IST)

வங்கக்கடலில் புயல் சின்னம்: பள்ளிகள் விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு..!

வங்க கடலில் புயல் சின்னம் ஏற்பட்டுள்ளதை அடுத்து பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது 
 
தென்கிழக்கு வங்க கடலில் உருவாகும் புயல், ஆந்திராவில் உள்ள நெல்லூர் மற்றும்  மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 
 
இந்த புயல் டிசம்பர் 4ஆம் தேதி கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது டிசம்பர் 5ஆம் தேதி கடக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த புயல் காரணமாக சென்னையில்  கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
இதனைஅடுத்து நாளை அதாவது டிசம்பர் 2ஆம் தேதி சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. 
 
சென்னை மட்டுமின்றி வேறு சில மாவட்டங்களுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran