1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 30 நவம்பர் 2023 (14:21 IST)

பள்ளிகளுக்கு விடுமுறை இல்லையா? மழையில் நனைந்தபடி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள்..!

கனமழை பெய்தும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததால் மழையில் நனைந்தபடியே செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த மாணவிகள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கனமழை காரணமாக சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தாலும் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு விடுமுறை இல்லை என ஆட்சி தலைவர் அறிவித்திருந்தார்.

இதனால் மாணவர்கள் மழையில் நனைந்தபடி பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பள்ளிக்கு சென்றாலும் மழை நீர் தேங்கி இருந்ததால் பாடத்தை கவனிக்க முடியவில்லை.

இந்த நிலையில் திருக்கழுக்குன்றம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் திடீரென மாவட்ட ஆட்சித் தலைவர் விடுமுறை விடாததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மழையில் நனைந்தபடியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மெத்தனமாக செயல்படுவதாக பெற்றோர்கள் தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Edited by Siva