வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 3 ஆகஸ்ட் 2022 (08:10 IST)

சென்னையில் அதிகாலை முதல் மழை: குளிர்ச்சியாக கிளைமேட்டால் மக்கள் மகிழ்ச்சி!

rain
சென்னையில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருவதையடுத்து சென்னையில் கிளைமேட் குளிர்ச்சியாக உள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது என்பதும் இதனை அடுத்து ஒரு சில மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சென்னையில் இன்று அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான தட்பவெப்பநிலை நிலவுகிறது
 
கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததை அடுத்து தற்போது கிளைமேட் மாறி உள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்