வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 16 ஜூலை 2019 (11:55 IST)

இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை – மக்களை மகிழ்வித்த செய்தி !

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் சில பகுதிகளில் நேற்று பெய்த மழையைத் தொடர்ந்து இன்னும் இரண்டு நாட்களுக்கு மழைப்பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைத்தது. கடுமையான வெயிலால் மக்கள் தண்ணீர் பஞ்சத்தை சந்தித்து வரும் வேளையில் சென்னைக்கு நீர் வழங்கும் ஏரிகள் முழுவதுமாக வற்றும் நிலையில் உள்ளன. அதனால் மக்கள் மழையைப் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதையடுத்து சென்னை உள்ளிட்ட சிலப் பகுதிகளில் நேற்று திடீர்மழை பெய்தது. இரவு 8 மணிக்கு ஆரம்பித்த மழை நள்ளிரவு வரைக் கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர்  பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மக்கள் மிகவும் மகிழ்ந்துள்ள வேளையில் இன்னும் இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழைப்பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த செய்தியை தமிழ்நாடு வெதர்மேன் என அழைக்கப்படும் பிரதீப் ஜானும் தனது டிவிட்டரில் உறுதி செய்துள்ளார்.