திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 15 ஜூலை 2019 (21:06 IST)

சென்னையில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கும் மழை ! மக்கள் நிம்மதி

கோடை காலம் வந்து தமிழக மக்களை தண்ணீருக்கு படாதபாடு பட வைத்து விட்டது.பெருகிய ஆழ்குழாய் கிணறுகள்  , ஏரிகள் சரியாக பராமரிகாமை , மழை நீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு பொதுமக்களிடம்  இல்லாமை போன்ற காரணங்களால் தமிழகம் ரொம்பவே நீர் பஞ்சத்தில்  இந்த ஆண்டு அடி பட்டு விட்டது.
இப்படி இருக்க தென்மேற்கு பருவமழையும் பொய்த்துவிட்டது. என்று மக்கள், விவசாயிகள்  கவலையும் இருக்க இன்று வானம் இந்த மாலை நேரத்தில் இடி மின்னலுடன் வானம் பொத்துக்கொண்டு மழையைப்  பெய்கின்றது.
 
இதனால் மக்களும் விவசாயிகளும் பெரிதும் மகிச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக இந்த மழையை அறிவார்ந்த முறையில் சேகரித்து வீண்டிக்காமல் பார்த்துக்கொண்டாலே தண்ணீர் பஞ்சம் நம்மை அண்டாது என்பது பெரும்பாலானவர்களின் வேண்டுகோளாக உள்ளது.