திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 15 ஜூலை 2019 (19:54 IST)

கார் கஸ்டமரை வரவேற்று ..’பைக் கஸ்டமரை ’ விரட்டும் பிரபல உணவகம் ..?

சென்னை மதுரவாயலில் உள்ள பிரபல (வசந்த ) ஹோட்டலுக்கு, டூவிலரில் சென்ற ஒருவர் பலத்த அவமானங்களுக்கு உள்ளானார். 
இன்று அந்த பிரபல ஹோட்டலுக்கு தனது டூவீலரில்  சென்ற ஒருவர், அந்த ஹோட்டலுக்கு முன்னால் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு, உள்ளே சாப்பிடச் சென்றார். 
 
அப்போது அங்கிருந்த ஒரு ஆறடி மனிதர் , அவரிடம் வந்து நீங்கள் டூவீலரில் வந்தீர்களா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த வாடிக்கையாளர் ஏன் என்று கேட்க.. நீங்கள் கார் பார்க்கிங்கில் டூவீலரை நிறுத்தி உள்ளீர்கள் அதனால் தான் சொல்கிறேன்,. காரில் வரும் வாடிக்கையாளருக்குத்தான் இந்த இடம் என்று கூறியுள்ளார்.
 
ஆனால் அப்போது எந்த வண்டியும், பார்க்கிங் செய்யாத நிலையிலும், வாடிக்கையாளரை வலுக்காட்டாயமாக பார்க்கிங்கிலிர்ந்து டூவீலரை எடுத்து பார்க்கிங்கை ஓரமாக எடுக்கவைத்துள்ளார். இதனால் காரில் வருபவர்களை கண்ணியமாகவும், டூவீலரில் வருபவர்களை மரியாதை குறைவாக நடத்துவதாக அவர் வாயில் சாபமிட்டுப் போனார்.