திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 25 மே 2022 (22:12 IST)

நாளை இந்த சாலைகளை தவிர்க்கவும்: சென்னை போக்குவரத்து காவல்துறை

traffic
நாளை ஒரு சில சாலைகளில் செல்வதை தவிர்க்கவும் என்றும் சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது
 
பிரதமரின் வருகையை ஒட்டி விழா நடைபெறும் இடம் மற்றும் அதை சுற்றி உள்ள சாலைகளில் பொதுமக்கள் அதிக அளவில் பயணம் செய்ய வேண்டாம் என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது
 
குறிப்பாக ஈவேரா சாலை, தாசப் பிரகாஷ் முதல் சென்னை மருத்துவக்கல்லூரி சந்திப்பு வரை மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது
 
அண்ணா சாலை, எஸ்வி பட்டேல் சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலைகளில் போக்குவரத்து மெதுவாக இருக்கும் என்றும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது