1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai to srilanka flights cancel today

கனமழை எதிரொலி: சென்னையில் 2வது நாளாக விமான சேவை பாதிப்பு!

சென்னை
கனமழை காரணமாக நேற்று சென்னை விமான நிலையத்திற்கு வரவேண்டிய பல விமானங்கள் பெங்களூர் விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டன என்பதும் சென்னையில் இருந்து கிளம்பும்போது விமானங்கள் தாமதமாக கிளம்பியது என்பதும் ஒரு சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் கனமழை காரணமாக இன்று இரண்டாவது நாளாகவும் சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இலங்கை - சென்னை மற்றும் சென்னை - இலங்கை செல்லும் இரண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
இலங்கை - சென்னை ஏர் இந்தியா விமானமும், அந்தமான் செல்லும் ஏர் இந்தியா விமானமும் தாமதமாக புறப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
மழைநீர் தேங்கி இருக்கும் ரன்வே பகுதியில் மழை நீரை அப்புறப்படுத்தும் பணிகளில் விமான நிலைய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
விஜய் கட்சியை கூட்டணியில் இணைத்து கொள்ள தயார்.. காங்கிரஸ், பாஜக அழைப்பு..!