’கனமழை நீடிக்கும்’ - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 5 ஜனவரி 2021 (16:07 IST)
சென்னையில் மேலும் 3 - 6 மணி நேரம் வரை கனமழை பெய்ய கூடும் என தகவல். 

 
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதன் காரணமாக சென்னையில் ஜனவரி 3 ஆம் தேதி முதல் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் இன்று காலை முதல் சென்னையின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் மணிக்கணக்கில் விடாமல் கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது.
 
சென்னையில் கடந்த 6 மணி நேரத்தில் அதிகபட்சமாக தரமணியில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையில் மேலும் 3 - 6 மணி நேரம் வரை கனமழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :