திங்கள், 23 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 23 செப்டம்பர் 2024 (15:05 IST)

சென்னையின் முக்கிய பகுதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என்ற பெயர்: எஸ்பிபி சரண் மனு!

spb - spbalasubramaniam
சென்னையின் முக்கிய பகுதிக்கு 'எஸ்பி பாலசுப்ரமணியம் நகர்' என்ற பெயர் வைக்க வேண்டும் என்று எஸ்பிபி சரண், முதல்வரிடம் மனு அளித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கடந்த 1966 ஆம் ஆண்டு முதல் பின்னணி பாடகராக இருந்தவர் எஸ்பி.பாலசுப்ரமணியம் . இவர்  தமிழ் உள்பட பல தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தி உள்பட வட இந்திய மொழிகளிலும் சுமார் 40 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். இவருக்கு பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷன்   விருதுகள் வழங்கப்பட்டன. அது மட்டுமின்றி ஆறு முறை தேசிய விருதையும் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட எஸ்பி பாலசுப்பிரமணியம் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் எஸ் பி பாலசுப்ரமணியம் வாழ்ந்த காம்தார் நகரை 'எஸ் பி பாலசுப்ரமணியம் நகர்' என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று அவரது மகன் எஸ்பிபி சரண், முதல்வர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார். இந்த மனு விரைவில் பரிசீலனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது."

Edited by Siva