1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 5 ஏப்ரல் 2018 (10:31 IST)

திருத்தணி- சென்னை மின்சார ரயில் மறிப்பு: திமுக அதிரடி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காத மாநில அரசை கண்டித்தும் திமுக தலைமையில் 15 கட்சிகள் ஒன்று சேர்ந்து இன்று போராட்டம், பந்த் நடத்தி வருகிறது. சென்னை உள்பட பெரும்பாலான நகரங்களில் பேருந்துகள் ஓடவில்லை, கடைகளும் திறக்கவில்லை

சென்னை  அண்ணா சாலையில் சற்றுமுன்னர் திமுக மற்றும் விசிக தொண்டர்கள் ஏராளமானவர்கள் கூடி பேருந்துகளை மறித்து சாலை மறியல் செய்தனர் என்பதை பார்த்தோம். மேலும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் உள்பட ஆயிரக்கணக்கானோர் அண்ணா சாலை வழியாக பேரணியாக மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் வரை செல்ல திட்டமிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருத்தணி- சென்னை செல்லும் மின்சார ரயிலையும் மறித்து திமுக கூட்டணி கட்சியினர் மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திமுக தொண்டர்கள் ரயில் தண்டவாளத்தில் படுத்து கொண்டு கோஷம் போடுவதால் போலீசார் செய்வதறியாது திகைத்து போயுள்ளனர்,. மேலும் ரயில் பயணிகளும் பாதிவழியில் ரயில் நிற்பதால் பரிதவித்து வருகின்றனர்.