செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 18 ஜூலை 2021 (17:22 IST)

சென்னை தி நகரில் குவிந்த கூட்டம்: கொரோனாவுக்கு கொண்டாட்டம்!

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் குறைந்ததை அடுத்து தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறைந்துவிட்டதாகவும் முடிந்து விட்டதாக எண்ணி பொதுமக்கள் வழக்கம்போல் நடமாட தொடங்கியதால் கொரோனாவுக்கு கொண்டாட்டம் ஏற்பட்டு உள்ளது 
 
குறிப்பாக சென்னை தி நகரில் உள்ள கடைகளிலும் பாண்டிபஜார் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிவதை பார்க்கும் போது கொரோனா மீண்டும் பரவி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. சனி ஞாயிறு விடுமுறை நாள் என்பதாலும் பக்ரீத் பண்டிகை இன்னும் ஓரிரு நாட்களில் வர இருப்பதாலும் துணிக்கடைகள் நகைக்கடைகளில் கூட்டம் குவிந்து வருகிறது என்பதும் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற அரசின் விதிமுறை பல கடைகளில் காற்றில் பறக்கவிட பட்டதாகவும் தெரிகிறது 
 
இந்த நிலையில் நேற்று சென்னை தி நகரில் உள்ள கடையில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை செய்து 50 சதவீதத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களை அனுமதித்த கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது